தலைவி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

412

தல அஜித் நடித்த கிரீடம் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் ஏ.எல்.விஜய். இவர், தாண்டவம், மதராசப்பட்டினம், சைவம், தலைவா, தேவி, தேவி-2 உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் இவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை தலைவி என்ற பெயரில் இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இந்த திரைப்படத்தில், ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத்தும், எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்தசாமியும் நடிக்கின்றனர்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில், திரைப்படம் ஜூன் மாதம் 26–ந்தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement