கே.ஜி.எப் ஸ்டண்ட்டுகளை மிஞ்சும் தளபதி 65 !!

192

மாஸ்டர் படத்தை அடுத்து நடிகர் விஜய் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்திற்கு டைட்டில் வைக்கப்படாத நிலையில் தளபதி 65 என்று தற்போது அழைக்கப்படுகிறது. ‘கோலமாவு கோகிலா’,‘டாக்டர்’ உள்ளிட்ட படங்களை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார்.

Thalapathy-65-to-have-exceptional-stunts-than-KGF

தளபதி 65 படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் படத்தின் சண்டை இயக்குநராக அன்பறிவு பணியாற்ற உள்ள நிலையில், படத்தின் சண்டைக் காட்சிகள் அதிரடியாக இருக்கும் என அந்தப்படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப் குமார் கூறியுள்ளார். இது தொடர்பாக டைம்ஸ் ஆஃப் இந்தியா இணையதளம் வெளியிட்ட செய்தியில் படத்தின் இயக்குநர் நெல்சன் கூறும்போது, “ விஜய் 65 படத்தின் சண்டைக்காட்சிகள் அதிரடியாக இருக்கும். விஜய் 65 படத்தின் சண்டைக் காட்சிகளை பார்த்த பின்னர், கே.ஜி.எப் படத்தின் சண்டைக்காட்சிகளை ரசிகர்கள் மறந்துவிடுவார்கள்’ என்று கூறியுள்ளார்.

கேஜிஎப் படத்திற்கு சண்டை இயக்குநராக இருந்த அன்பறிவு தான் தளபதி 65 படத்திற்கும் சண்டை இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement