“லோகேஷ் கனகராஜையும் இப்படி செய்ய வச்சிட்டாங்கப்பா..” விஜய் தான் காரணமா..?

1294

மாநகரம், கைதி திரைப்படங்களை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தளபதி விஜயை வைத்து தளபதி 64 படத்தை இயக்கி வருகிறார். அனிருத் இசையமைக்கும் இந்த திரைப்படத்தில், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

தளபதி விஜயும், மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் முதன்முறையாக இணைவதால், இந்த திரைப்படத்தின் கதை என்னவாக இருக்கும் என்று பல்வேறு தரப்பினர் பல்வேறு யூகங்களை தெரிவித்து வருகின்றனர்.

மாநகராம், கைதி ஆகிய இரண்டு படங்களும் பயங்கர ராவாக எடுக்கப்பட்ட திரைப்படம் என்பதால், இதுவும் பயங்கர ராவாக இருக்குமா..? அல்லது வழக்கம் போலான விஜய் பட பாணியில், சேசியல் மெசேஜ் சொல்லும் கமர்சியல் திரைப்படமாக இருக்குமா என்று ரசிகர்கள் ஆர்வமாக இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த திரைப்படம், கல்வி முறைக்கும், அதில் இருக்கும் ஊழல் பெருச்சாளிகளுக்கும் எதிராக கருத்து மழை பொழியும் கேரக்டரில் விஜய் நடிப்பதாக நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

நான் எந்த கருத்தும் சொல்ல விரும்பல, எங்கிட்ட இருக்க கதைய சொல்றேன் என்பதை போல தான், லோகேஷ் கனகராஜின் கதைக்களம் இருக்கும். ஆனால், விஜயுடன் கூட்டணி வைத்த முதல் படமே.. விஜயின் பாணிக்கு இயக்குநர் மாறி விட்டார்.

அதாவது, சமூக கருத்து சொல்லும் பாணிக்கு இயக்குநர் மாறி விட்டார். இதற்கு விஜய் தான் காரணமா அல்லது இயக்குநரே எடுத்த முடிவா என்பது, அந்த கடவுளுக்கு தான் வெளிச்சம்.