15 ஆம் தேதி இசை வெளியீட்டு விழா.. இதுக்கு இடையில எங்க போறாரு தளபதி? – வைரலாகும் வீடியோ

1929

மாஸ்டர் படத்தின் இசை வெளியிட்டு விழா குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் நடிகர் விஜய் ஓய்வெடுக்க வெளிநாடு செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய் நடிக்கும் 64 வது படம் மாஸ்டர். இந்த படத்தை மாநகரம், கைதி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். வில்லனாக முன்னணி நடிகரான விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

இந்த நிலையில் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 15 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நடிகர் விஜய் ஏர்போர்ட்டில் செல்லும் வீடியோ ஒன்றை பதிவிட்டு, ஒரு குட்டி டூர் செல்கிறார் என ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

Advertisement