விஜய்க்கு எதிரியாக மாறும் தமன்னா,கார்த்திக்

967

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, த்ரிஷா, அஞ்சலி உள்ளிட்ட பலரும் த்ரில்லர் கதைகளில் கவனம் செலுத்தி வரும் நிலையில் நடிகை தமன்னாவும் திகில் கலந்த நகைச்சுவை கதையில் நடித்து வருகிறார்.

அதே கண்கள் இயக்குநர் ரோகின் வெங்கடேசன் இத்திரைப்படத்தை இயக்குகிறார். பெட்ரோமாக்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் யோகி பாபு, முனீஸ் காந்த், சத்யன், காளி வெங்கட் என பலமான நகைச்சுவை தமன்னாவுடன் இணைந்துள்ளது.இவர்களுடன் பேபி மோனிகா, ஸ்ரீஜா, வெங்கடேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் தெலுங்கில் டாப்ஸி, வெண்ணிலா கபடி குழு கிஷோர் நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியாகி ஹிட்டான ‘அனந்தோ பிரம்மா’ என்ற படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தினை செப்.13-ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியான..

ஆனால் தற்போது படகுழு அறிவித்த புதிய அப்டேட்… இப்படம் தீபாவளிக்கு வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

தீபாவாளிக்கு பிகில் படத்துக்கு போட்டியாக வெளிவரும் படங்கள் அதிகமாகி வருகிறது. அதில் கார்திக் நடிக்கும் கைதி என்கிற படமும் தற்போது வந்துள்ள அப்டேட் தமன்னா நடிக்கும் பெட்ரோமாக்ஸ் படமும் வெளியாகின்றன.இதில் எந்த படத்துக்கு ரசிகர்கள் ஆதரவு இருக்கும் என்பது தெரியவில்லை. சில நிமிடங்களில் வெளிவந்த பிகில் பட பாடல் சமூக வலைத்தளதில் புதிய சாதனை படைத்துள்ளது என்பது குறிபிடத்தக்கது.

Advertisement