காதலர் கேட்ட பயங்கர கேள்வி! அதிர்ந்து போன ஸ்ருதி ஹாசன்!

1833

நடிகைகள் இரண்டு பேர் தோழிகளாக இருக்கவே முடியாது என்பதை ஸ்ருதி ஹாஸன், தமன்னாவை பார்த்து மட்டும் சொல்ல முடியாது. இருவரும் அந்த அளவுக்கு நெருங்கிய தோழிகள் ஆவர்.

நான் ஆணாக பிறந்திருந்தால் தமன்னாவை தான் திருமணம் செய்திருப்பேன் என்று ஸ்ருதி பேட்டி ஒன்றில் தெரிவித்து அனைவரையும் வியக்க வைத்தார்.
தமன்னா ரொம்ப நல்ல பெண். அதனால் தான் நான் ஆணாக பிறந்திருந்தால் அவரை திருமணம் செய்வேன் என்றார் ஸ்ருதி. அவர் கூறியதால் சர்ச்சை ஏற்பட்டது.

இந்நிலையில் இது குறித்து தமன்னா தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
ஸ்ருதி என் நெருங்கிய தோழி. என்னை திருமணம் செய்வதாக அவர் கூறியது காமெடிக்கு. அவர் என்னை பற்றி தெரிவித்தது அவரின் காதலர் மைக்கேல் கார்சேல் வரைக்கும் சென்றுள்ளது.

மைக்கேல் ஸ்ருதிக்கு போன் செய்து நீ நிஜமாகவே தமன்னாவை திருமணம் செய்யப் போகிறாயா என்று கேட்டுள்ளார். இதை ஸ்ருதி என்னிடம் கூறினார்.
ஸ்ருதி என்னை திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறியதை யாரும் சீரியஸாக எடுக்க வேண்டாம்.

அது சும்மா காமெடிக்கு சொன்னார் என்று தெரிவித்துள்ளார் தமன்னா. ஸ்ருதி ஜோக்கடித்தது வேறுவிதமாக எடுத்துக் கொள்ளப்பட்டதால் தமன்னா இப்படி விளக்கம் அளித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of