தமிழகத்தை வஞ்சிப்பதே பாஜக, காங்கிரசின் நோக்கம் – தம்பிதுரை

387

தமிழகத்தை வஞ்சிப்பதே பாஜக, காங்கிரசின் நோக்கம் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை குற்றம் சாட்டினார்.

திருவாரூர் மாவட்டம் ஸ்ரீவாஞ்சியம் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த தம்பிதுரை, அதிமுக வேட்பாளாரின் பெயர், வரும் 10 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெறும் எனவும் தெரிவித்தார். தமிழகத்தின் பிரச்சனையை பாஜக, காங்கிரஸ் கண்டுகொள்ளவில்லை என்றும், அவர்களின் நோக்கம் கர்நாடகாவில் வெற்றி பெற வேண்டும் என்பது தான் என்று தம்பிதுரை தெரிவித்தார். தமிழகத்தை வஞ்சிப்பதே பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் நோக்கம் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of