நிவாரணம் வழங்கும் விஷயத்தில், ஸ்டாலின் பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிடுறார் – தம்பிதுரை

562

கஜா புயல் நிவாரணம் வழங்கும் விஷயத்தில், ஸ்டாலின் பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிடுறார் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கடுமையாக விமர்சித்துள்ளார்.

கரூரை அடுத்த புலியூர் பகுதியில், மக்களின் குறைகளை கேட்டு மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தம்பிதுரை பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், கஜா புயல் பாதிப்பு குறித்து, மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றால்தான் உரிய நிவாரணம் பெற முடியும் என தெரிவித்தார்.

மு.க. ஸ்டாலின் முதலில் தமிழக அரசு நன்றாக செயல்படுகிறது என கூறிவிட்டு , இப்போது குறை சொல்வது, பிள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டும் செயல் என காட்டமாக கூறினார்.

மேலும், கஜா புயலை வைத்து ஸ்டாலின் அரசியல் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என தம்பிதுரை தெரிவித்தார்.

 

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of