தமிழக வேலை தமிழருக்கே! நாம் தமிழர் கட்சி டிரெண்டாக்கும் புதிய ஆஷ் டேக்!

1288

சமூக வலைத்தளமான டிவிட்டரில் தமிழக வேலை தமிழருக்கே என்ற ஹேஷ் டேக் டிரெண்டாகி வருகிறது. தமிழ் தேசிய பேரியக்கமும், நாம் தமிழர் கட்சியினரும் சேர்ந்து இந்த ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர்.

தமிழக வேலை தமிழர்களுக்கே இருக்க வேண்டும் என்பதை முன்னெடுத்து இந்த ஹேஷ்டேக் டிரெண்டாக்கப்பட்டு வருகிறது.

“தமிழ்த் தேசியப் பேரியக்கம் முன்னெடுக்கும் சமூக வலைத்தளப் பரப்புரையில் இணைந்து வலிமை சேர்க்க வேண்டுமென தாய்த்தமிழ் உறவுகளை கேட்டுக்கொள்கிறோம்”

என நாம் தமிழர் கட்சியினர் பதிவிட்டு, இந்த ஆஷ்டேக்குகளை டிரெண்ட் ஆக்கி வருகின்றனர்.

இந்த ஆஷ் டேக்குகளை பதிவிட்டு பலரும் தங்களது ஆதங்கங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of