தாமிரபரணி நதியில் கலக்கும் கழிவுநீர்

36

தாமிரபரணி நதியில் கழிவுநீர் கலப்பதை முழுமையாக தடை செய்ய நடவடிகை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக பாளையங்கோட்டை ராமையன்பட்டியை சேர்ந்த  காட்டுராஜா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன் சுந்தர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தாமிரபரணி நதியில் கழிவுநீர் கலப்பதை முழுமையாக தடை செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கினை வரும் 19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்