திண்டுக்கல் அருகே சுற்றுலா பேருந்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டத்தில் பேருந்து முழுவதும் எரிந்து தீக்கிரையானது.

189

திண்டுக்கல் அருகே சுற்றுலா பேருந்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டத்தில் பேருந்து முழுவதும் எரிந்து தீக்கிரையானது. இதில் பயணம் செய்த 45 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து 45 சுற்றுலா பயணிகள் தனியார் பேருந்தில் கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்று கொண்டிருந்தனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே விட்டலநாயக்கன்பட்டி என்ற இடத்தில் பேருந்தின் டயர் வெடித்ததில் பேருந்தில் தீப்பற்றியுள்ளது, இதையடுத்து பேருந்தின் ஓட்டுநர் சாமர்த்தியமாக பேருந்தில் இருந்த அனைத்து பயணிகளையும் பேருந்தில் இருந்து இறக்கி உள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரம் போராடி தீயை முழுவதுமாக அணைத்தனர். இந்த விபத்தில் நல்வாய்ப்பாக பேருந்தில் பயணம் செய்த 45 சுற்றுலா பயணிகள் உயிர் தப்பினர். இதுதொடர்பாக வேடசந்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.