மோடிக்காக காவி வேட்டி கட்டிய OPS.., தங்க தமிழ்ச்செல்வன் காட்டம்

526

அ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் திருப்பரங்குன்றத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது அவர் கூறுகையில்,

“தி.மு.க., அ.தி.மு.க. தலைவர்கள் பிரசாரத்தில் அவர்களின் நிலைப்பாட்டில் பின்வாங்குகிறார்கள். எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க விவகாரத்தில் சபாநாயகர் நடவடிக்கை அவசரமானது. தமிழக மக்கள் புதிய தலைமையை எதிர்பார்க்கிறார்கள்.

அம்மா இல்லாத நிலையில் அ.தி.மு.க.வினர் தி.மு.க. விற்கு வாக்களிப்பார்கள் என்று மு.க.ஸ்டாலின் பேசுவது தவறானது. அ.ம.மு.க.விற்கு தான் அம்மாவின் தொண்டர்கள் வாக்களிப்பார்கள்.

தமிழக மக்களுக்கு எடப்பாடி அரசு மீது நம்பிக்கை இல்லை என்பதையே அமைச்சர்கள் பிரசாரங்கள் வெளிப்படுத்துகிறது. திருப்பரங்குன்றம் தொகுதியில் பணப்பட்டுவாடா குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.

ஜெயக்குமார் விஞ்ஞான பூர்வமாக யோசிக்கிறார். காவி வேட்டியை கட்டி கொண்டு மோடி சாமியை வணங்கதான் வாரணாசி சென்றுள்ளனர். ஓ.பி.எஸ். குடும்பத்தால் தமிழகத்தின் மானம் வடமாநிலத்தில் காற்றில் பறக்கிறது.

மோடி நீட் தேர்வு கொண்டு வந்த காரணமே வட மாநிலத்தவர்களை தமிழகத்தில் அனுமதிக்க வேண்டும் என்பதே. நீட் என்பது தமிழகத்தில் திணிக்கப்படுகிறது. வசந்த குமார் எம்.பி. தேர்தலில் வெற்றி பெற்றால் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யும் நிலை வந்தால் பிரச்சினை உள்ளது.

அ.ம.மு.க. என்பது அனைத்து தொகுதிகளிலும் நிச்சயம் வெல்லும். ஆளுநர் பதவியை பெற்றுக்கொண்டு அரசியல் வாழ்வை முடித்து கொள்ளலாம் என ஓ.பி.எஸ். நினைக்கிறார். அவரது மகன் வெற்றி பெறமாட்டார். பதவிக்காக எதையும் செய்யகூடியவர் ஓ.பி.எஸ். பா.ஜனதா சொல்படியே ஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ். செயல்படுகிறார்கள்.

தி.மு.க.வின் ‘பி’ என்பது எங்கள் மீதான அச்சத்தின் வெளிப்பாடு. ஓட்டை பிரிக்கும் கட்சி அ.ம.மு.க. அல்ல. வெற்றிபெறும் கட்சியாக உள்ளது. நான் ஓ.பி.எஸ்.சின் துரோகங்களை தான் எடுத்துக் கூறுகிறேன். அ.தி.மு.க.வை நாங்கள் பிரிக்கவில்லை. நாங்கள் உண்மையான அ.தி.மு.க. என்பதை தேர்தல் முடிவிற்கு பின் மக்களே அடையாளம் காட்டுவார்கள்.

தேர்தல் முடிவிற்கு பின் அ.தி.மு.க. காணாமல் போகும். அ.ம.மு.க. தான் அ.தி.மு.க. என்பதை நிரூபிப்போம். திருப்பரங் குன்றம் தொகுதியில் குடிநீர், பாதாள சாக்கடை, சாலைவசதி அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை என மக்கள் குற்றச் சாட்டுகளை அடுக்குகின்றனர்.

பாராளுமன்ற தேர்தல் முடிவிற்கு பின் இழுபறி நிலை ஏற்பட்டால் கட்டாயம் பா.ஜனதாவிற்கு ஆதரவு கொடுக்கமாட்டோம். பா.ஜனதா தவிர்த்து மற்ற கட்சிகளுக்கு ஆதரவு தொடர்பாக பொதுச் செயலாளர் முடிவு செய்வார்” என தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of