ஒரு பாட்டில் வாங்க முடியல..! – வேண்டும் “நடமாடும் டாஸ்மாக்” – சட்டப்பேரவையில் தனியரசு “டாக்”

667

மாலை நேரங்களில் டாஸ்மாக் கடையில் மது வாங்குவதற்கு சிரமமாக இருப்பதால் நடமாடும் டாஸ்மாக் கடைகளை உருவாக்க வேண்டும் எனஎம்.எல்.ஏ தனியரசு பேசிய சம்பவம்  சட்டப்பேரவையில் அரங்கேறியுள்ளது.

வேளாண்துறை மானியக் கோரிக்கை மீது விவாதத்தில் பேசிய காங்கேயம் தொகுதி எம்எல்ஏ தனியரசு, 

டாஸ்மாக் கடைகளில் அலைமோதும் கூட்டத்தால் மாலை நேரங்களில் ஒரு பாட்டில் வாங்குவதற்கு கூட சிரமமாக உள்ளது. அந்த காலத்தில் புதுப்படத்திற்கு டிக்கெட் வாங்க வரிசையில் நின்று கஷ்டப்படுவதை போல் டாஸ்மாக் கடையில் வரிசையில் நிற்கவேண்டியுள்ளது.

எனவே இந்த சிரமத்தை போக்க அரசு நடமாடும் டாஸ்மாக் மதுபானக்கடையை கொண்டுவர வேண்டும் என தனியரசு கோரிக்கை வைத்து பேசினார். இவர் பேசிய அந்த தருணம் அவை முழுவதும் சிரிப்பலையில் ஆழ்ந்தது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of