சாலையில் அறுந்து கிடந்த மின்கம்பிகள் – உயிர் சேதத்தை தடுத்த ஆட்டோ ஓட்டுநர்

279

தஞ்சையில், நள்ளிரவில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி மின்கம்பிகள் சாலையில் அறுந்து கிடந்ததால், ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தனிநபராக, ஆட்டோவை சாலையின் குறுக்கே நிறுத்தி உயிர் சேதத்தை தடுத்துள்ளார்.

தஞ்சை பெரிய கோவில் அருகே, மாநில நெடுஞ்சாலையில் நாள்ளிரவில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி மின்கம்பம் சேதமடைந்து சாலையில் விழுந்துள்ளது. மேலும் மின்கம்பிகள் இணைப்பு துண்டிக்காமல் சாலையில் இருந்துள்ளது.

இதனை பார்த்த ஆட்டோ ஓட்டுநர் பாண்டுரங்கன் என்பவர் அவசர எண்ணை தொடர்ந்து கொண்டு தகவல் தெரிவித்தும், நீண்ட நேரம் ஆகியும் வரவில்லை.
இதனால் பாண்டுரங்கன் ஆட்டோவை பிரதான சாலையின் குறுக்கே நிறுத்தி அதிகாலை 3 மணி முதல் அனைத்து வாகனங்களையும் வேறுவழியில் செல்லுமாறு போக்குவரத்தை மாற்றம் செய்து வந்துள்ளார்.

கொட்டும் பணியில் நின்று பெரும் விபத்தையும், உயிர் சேதத்தையும் தடுத்த ஆட்டோ ஓட்டுநருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.