திமுக சார்பில் தஞ்சாவூர் காவிரி டெல்டா விவசாயிகள் கருத்தரங்கு கூட்டம்

227

காவிரி டெல்டா பகுதியை “பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக” அறிவிக்க கோரி திமுக சார்பில் வரும் 28-ம் தேதி தஞ்சாவூரில் காவிரி டெல்டா விவசாயிகள் கருத்தரங்கு கூட்டம் நடைபெறுகிறது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மத்திய – மாநில அரசுகளின் அலட்சியப் போக்கால் தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் காலியாகி, விவசாயமும், விவசாய தொழில்களும் முழுமையாக நலிவடைந்து விட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

காவிரி டெல்டா பகுதியை “பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக” அறிவிக்க கோரி, வருகிற 28-ம் தேதி தஞ்சாவூரில் காவிரி டெல்டா விவசாயிகள் கருத்தரங்கம் நடைபெற உள்ளதாகவும், அதில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நிறைவுரை ஆற்ற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of