டிடிவியை பொதுச்செயலாளராக்கியது ஏன்? தங்கத்தமிழ் செல்வன் விளக்கம்!

311

டிடிவி தினகரனால் உருவாக்கப்பட்ட அமமுக கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார். துணைப்பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் இருந்து வந்தார்.

தற்போது, நீதிமன்றத்தில் உறுதி அளித்தபடி, அமமுகவை அரசியல் கட்சியாக பதிவு செய்ய டிடிவி தினகரன் முடிவு செய்துள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், அமமுகவின் துணைப் பொதுச்செயலாளரான டிடிவி தினகரன், இன்று கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தங்க தமிழ்ச் செல்வன், அமமுகவை கட்சியாக பதிவு செய்ய உள்ளதால் தினகரனை பொதுச்செயலாளராக தேர்வு செய்தோம் என்றார்.

சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்த பின் அமமுகவின் தலைவராக இருப்பார் என்றும், அமமுகவின் துணைத்தலைவர் தேர்வு விரைவில் நடைபெறும் எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of