அதெல்லாம் உங்களுக்கு தேவையில்லாத விஷயம் ? கடுப்பில் “பக்ச்சி ராஜன்”

401

பிரதமர் மோடியின் சொந்த வாழ்க்கை குறித்த நடிகர் அக்சய குமார் எடுத்த பிரத்யேக பேட்டி நாடுமுழுவதும் பிரபலமடைந்தது.

பிரதமரை பேட்டி எடுத்ததால், பாராட்டு மழையில் நனைந்த நடிகர் அக்சய குமார் குறித்த தகவல்களை அறிய அனைவரிடமும் ஆர்வம் ஏற்பட்டது. இந்த தேர்தலில் அக்சய் குமார் வாக்களிக்கவில்லை என்பதும், அவர் கனடா நாட்டு குடியுரிமை பெற்றவர் என்பதும் இப்போது தெரியவந்துள்ளது.

இந்த பிரச்சினை குறித்து மழுப்பலாக முதலில் பதில் அளித்து வந்த அக்சய் குமார், கனடா நாட்டு குடியுரிமை ஒரு கவுரவ அந்தஸ்துதான் என்று கூறி வந்தார். தொடர்ந்து பலரும் அதே கேள்வியை கேட்க தொடங்கிய பிறகு, கனடா நாட்டு குடிமகன் என்பதையோ, கனடா பாஸ்போர்ட் வைத்திருப்பதையோ நான் மறைத்ததே இல்லை என்றும், நான் எந்த நாட்டு குடிமகன் என்பது மற்றவர்களுக்கு தேவையில்லாத விஷயம் எனவும் கோபத்தை வெளிக்காட்டியிருக்கிறார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of