இலங்கையில் தாக்குதலுக்கு முக்கிய காரணமாக இருந்தவர் மரணம்.., சிறிசேனா அறிவிப்பு

393

இலங்கையில் கடந்த 21 ஆம் தேதி ஈஸ்டர் அன்று நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பில் 350-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். தேவாலயங்களை முக்கிய இலக்காக கொண்டு மனித வெடிகுண்டு தாக்குதல் அரங்கேற்றப்பட்டது.இந்த தாக்குதலில் மனித வெடிகுண்டுகளாக செயல்பட்டது, இலங்கையிலுள்ள தேசிய ஜவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பு. இதன் தலைவர் முகமது ஜஹ்ரான் என்ற மதகுருவாகும். இவர் ஷாங்கிரிலா ஹோட்டலில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பின்போது இறந்துவிட்டதாக இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன இன்று அறிவித்துள்ளார். இவர் தேடப்பட்டு வந்த குற்றவாளியாகும்.

தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக இதுவரை 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் சிறிசேன தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலின் மூளையாக செயல்பட்டது ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கமாகும்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of