ஒரு கிலோ மீட்டருக்கு, ஒரு சுங்கசாவடியா..? உயர்நீதிமன்ற கிளை சரமாரியாக கேள்வி

596

தேசிய நெடுஞ்சாலை ஆணைய விதிகளின் படி, 4 வழிச்சாலையில் 60 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு சுங்கசாவடிதான் அமைக்க வேண்டும்.

ஆனால் மதுரை மாவட்டத்தில் மட்டும் சிந்தாமணி, மஸ்தான்பட்டி, பரம்புப்பட்டி ஆகிய 3 இடங்களிலும் அடுத்தடுத்து சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

27 கிலோ மீட்டருக்குள் 3 சுங்கசாவடிகள் அமைக்கப்பட்டதை கண்டித்து, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது மாநில நெடுஞ்சாலை துறை என்றால் ஒரு கிலோ மீட்டருக்கு, ஒரு சுங்கச்சாவடி அமைத்து கட்டணம் வசூலிப்பீர்களா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும் இது குறித்து வரும் 11ஆம் தேதி தமிழக அரசு விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என கூறி வழக்கு விசாரணையை அன்றைய தினத்திற்கே ஒத்தி வைத்தனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of