சென்னையில் 44-ஆவது புத்தகக் கண்காட்சி இன்று தொடக்கம்

208

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் 44-ஆவது புத்தகக் கண்காட்சி இன்று தொடங்குகிறது. நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இன்று காலை புத்தகக் கண்காட்சி திறக்கப்படுகிறது. விழாவின் சிறப்பு அழைப்பாளரான துணை முதலமைச்சர் திரு. ஓ. பன்னீர் செல்வம் புத்தகக் கண்காட்சியைத் திறந்து வைக்கிறார். இன்று முதல் புத்தக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் என பல தரப்பினரும் வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதில், சத்தியம் தொலைக்காட்சியின் சார்பாக அரங்கு எண் 119ல் எழுத்தாளர் டாக்டர் ஜாய் ஐசக் அவர்களின் நூலான இனியவளே உனக்காக, இளைஞனே உனக்காக, நிஜங்கள் போன்ற பல சமூக நல அக்கறை எண்ணத்துடன், பெண்கள் வாழ்வில் எப்படி இருக்க வேண்டும் என்ற பல கருத்துக்களை, கட்டுரைகளை எழுதி புத்தக வடிவில் வெளியிட்டு அதிகளவில் விற்பனை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இது போன்ற புத்தகங்களை பெறுவதற்கு இந்த புத்தகக் கண்காட்சி பயனுள்ளாதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு அனைத்து விதமான புத்த்கங்களும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement