பள்ளியில் இருந்து 24 குழந்தைகள் கடத்தல்: பிரிவினைவாதிகள் அட்டூழியம்

290

ஆப்பிரிக்கா நாடான கேமரூனில் ஆங்கிலொபோன் பிராந்தியந்தை தனி நாடாக்க 2017 ஆண்டு முதல் ஆயுதம் ஏந்தி போராடி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன் தினம் மெமே பிராந்தியத்தில் கும்பா நகரில் உள்ள ஒரு பள்ளியில் நுழைந்த பிரிவினைவாதிகள் அங்குள்ள 24 குழந்தைகளை கடத்திச்சென்று விட்டனர்.

இது அங்குள்ள மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. தங்களின் குழந்தைகளை பத்திரமாக மீட்டு தர வேண்டும் என அரசிடம் கோரிக்கை விடுத்தனர். அதன் பின் பிரிவினைவாதிகள் குழந்தைகளை கடத்தி சென்ற காட்டுக்குள் அதிரடியாக நுழைந்தது.

அப்போது குழந்தைகளை விடுவிக்க மறுத்த பிரிவினைவாதிகள் ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினர். உடனே ராணுவமும் தனது தாகுதல் வேட்டையை தொடர்ந்தது, நீண்ட நேரம் தாக்குதலுக்கு பின் குழந்தைகளை பத்திரமாக மீட்டு அவரவர் பொற்றோர்களிடம் ஒப்படைக்கபட்டது. இதே போல் குழந்தைகள் கடத்தல் சம்பவம் தொடர்ந்து அப்பகுதியில் அதிகரித்து வருகிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of