தமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஒப்பந்தம்

593

தமிழகத்தில் 3 இடங்கள் உள்பட நாடு முழுவதும் 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஒப்பந்தம் டெல்லியில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் இன்று கையெழுத்தாக உள்ளது.

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசலில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து அத்திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலும் மற்றும் காவிரி டெல்டா பகுதியில் இரு இடங்களிலும் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஓ.என்.ஜி.சி.

நிறுவனத்துக்கு சிதம்பரத்திலும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வேதாந்தா நிறுவனத்துக்கு காவிரி டெல்டா பகுதியிலும் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

தமிழகத்தில் 3 இடங்கள் உள்பட நாடு முழுவதும் 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஒப்பந்தம் டெல்லியில் இன்று மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of