நேரடியாக மேயர் தேர்தல் நடத்தினால் அதிமுக வெற்றி பெற முடியாது – கனிமொழி

206

நேரடியாக மேயர் தேர்தல் நடத்தினால் அதிமுக வெற்றி பெற முடியாது என்பதால் தான், மறைமுக தேர்தலை அறிவித்துள்ளனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர்  கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.

புதுச்சேரியில் நடைபெற்ற நிதி கூட்டாட்சி தத்துவ கருத்தரங்கில், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்துக்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசியலில் ஆளுமை வெற்றிடம் இல்லை என்பதை நாடாளுமன்ற தேர்தலில் நிரூபித்துள்ளதாக கூறினார்.

மேலும், ரஜினி, கமல் இணைந்து செயல்படுவது குறித்த செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அவர்கள் இணைந்த பிறகு அவர்களைப்பற்றி பேசலாம் என கூறினார்.