வீட்டில் இரண்டரை லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்த அதிமுக பிரமுகர் கைது

194
Gutka

திருவண்ணாமலை அருகே வீட்டில் இரண்டரை லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்த அதிமுக பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை ஆனைக்கட்டி தெருவில் உள்ள ஓரு வீட்டில் அதிமுக பிரமுகர் இளமாறன் என்பவர்  தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைத்துள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் போலீசார் நேரில் சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதிமுக பிரமுகர்  இளமாறன் என்பவர் வீட்டில் மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து இளமாறனை உடனடியாக கைது செய்த போலீசார், இரண்டரை லட்சம் மதிப்புள்ள 25 மூட்டை குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.