கட்டிடத்தொழிலாளி மர்ம நபர்களால் வெட்டிப்படுகொலை

86

நெல்லை அருகே நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த கட்டிடத்தொழிலாளி மர்ம நபர்களால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை அருகேயுள்ள கருபந்துறையைச் சேர்ந்த கட்டிடத்தொழிலாளி மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்கள் ஊரின் மையப்பகுதியில் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவ்வழியே வந்த மர்ம கும்பல் ஒன்று மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்களை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது.

இதில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்தில் பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பின் தகவலறிந்து விரைந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.