3 அடி ஆழ குழிக்குள் உயிருக்கு போராடும் பச்சிளம் குழந்தை- அதிர்ச்சியில் மக்கள்

602

உத்தர பிரதேச மாநிலம் பரேலி அருகே ஹித்தேஷ் குமார் சிரோஹி என்பவரது மனைவிக்கு 7 மாதத்திலேயே பெண் குழந்தை பிறந்துள்ளது.
குறைப்பிரசவத்தில் பிறந்ததால் சில நிமிடங்களிலேயே அந்த குழந்தை உயிரிழந்துள்ளது. இதையடுத்து குழந்தையை புதைப்பதற்காக கொண்டு சென்ற சிரோஹி, அதற்காக பள்ளம் தோண்டியுள்ளார்.

அப்போது குழியிலிருந்து கிடைத்த மண்பாணையில், பச்சிளம் பெண் குழந்தை ஒன்று மூச்சு விடத் திணறியபடி இருந்துள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சிரோஹி, அந்த குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

சுமார் 3 அடி ஆழத்தில் பச்சிளம் குழந்தையை உயிருடன் புதைத்தவர்கள் யார் என்பது குறித்தும், குழந்தையின் பெற்றோர் குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் மீட்கப்பட்ட பெண் குழந்தை தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.