ஜம்மு – காஷ்மீரில் எஸ்.எம்.எஸ் சேவைகளுக்கான தடை நீக்கப்பட்டுள்ளது

337

ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின் வதந்திகள் பரவுவதை தடுக்கும் வகையில் செல்போனில் போனில் எஸ்.எம்.எஸ். எனப்படும் குறுந்தகவல் சேவைகள் நிறுத்தப்பட்டன.

பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்ததை அடுத்து ஐந்து மாதங்களுக்கு பின் நேற்று முதல் மீண்டும் எஸ்.எம்.எஸ். சேவை துவக்கப்பட்டுள்ளது. ஆனால் தனிப்பட்ட முறையில் சந்தாதாரர்கள் எஸ்.எம்.எஸ் அனுப்ப முடியாது.

ஒன் டைம் பாஸ்வேர்டு போன்ற கம்ப்யூட்டர் பதிவுகள் மூலம் அனுப்பப்படும் எஸ்.எம்.எஸ் சேவையை மட்டுமே சந்தாதாரர்கள் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.