தேர்தல் பிரசாரத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை – பசுமை தீர்ப்பாயம்

284

தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் எட்வின் வில்சன் என்பவர் சார்பில் வக்கீல் சஞ்சய் உபாத்யாய் ஒரு மனு தாக்கல் செய்தார்.அதில் தேர்தல் பிரசாரத்தின்போது பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் காகிதங்களால் செய்யப்பட்ட கொடிகள், பேனர்கள், பெயர் பலகைகள் போன்றவை பின்னர் கழிவுகளாக செல்கின்றன.

இவை சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதால் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தடை செய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

இதனை விசாரித்த தீர்ப்பாய தலைவர் நீதிபதி ஆதர்ஷ்குமார் கோயல் தலைமையிலான அமர்வு தேர்தல் கமி‌ஷன் மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் துறை அமைச்சகங்கள் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை ஒரு வாரத்துக்குள் கூடி ஆலோசனை நடத்தி தேர்தல் பிரசாரத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தடை செய்வது குறித்து முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of