ஏர் ஏசியா விமானம் மீது மோதிய பறவை

433

ராஞ்சி விமான நிலையத்தில் இருந்து மும்பை புறப்பட்ட ஏர் ஏசியா விமானம் மீது பறவை மோதிய சம்பவத்தால், விமானம் மீண்டும் விமான நிலையத்திற்கே திரும்பியது.

ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியில் உள்ள விமான நிலையத்தில் இருந்து ஏர் ஏசியா விமானம் ஒன்று, பயணிகளை ஏற்றிக்கொண்டு மும்பை நோக்கி புறப்பட தயாரானது. அந்த விமானம், மேலெழுந்தபொழுது அதன் மீது பறவை ஒன்று மோதியதாக தெரிகிறது.

இதனால், அதிர்ச்சியடைந்த விமானி உடனே கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு மீண்டும் விமான நிலையத்திற்கே திரும்பினார்.

அதிர்ஷ்டவசமாக, விமானத்திற்கும், அதில் இருந்த பயணிகளுக்கும் எந்த பாதிப்பு ஏற்படவில்லை என விமான நிலையம் சார்பில் தகவல் வெளியாகியுள்ளது.