சீனாவில் பிறப்பு விகிதம் குறைவு

1996

சீனாவில் கடந்த 1949-ம் ஆண்டில் இருந்து தற்போது வரையிலான காலகட்டத்தில் பிறப்பு விகிதம் குறைந்து வந்துள்ளது.

வயதான சமூகம் அதிகரித்துள்ளதும் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்படுத்தி இருப்பது மந்தமான பொருளாதாரத்தின் மீது அழுத்தத்தை குவிக்கும் என கூறப்படுகிறது.

சீனாவில் இரண்டு குழந்தைகளை பெறுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை கடந்த 2016-ம் ஆண்டு விலக்கி கொள்ளப்பட்டது. இருப்பினும் நாட்டின் மக்களிடையே எந்த வித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

இது குறித்து சீனாவின் தெற்கு குவாங்டாங் மாகாணத்தை சேர்ந்த மக்கள் தொகை நிபுணர் ஒருவர் கூறியதாவது: நாட்டில் தினசரி செலவிற்கான விலை அதிகரித்து வருவதும் அதிக வாழ்க்கைச் செலவும் பிறப்பு விகிதம் குறைய காரணமாக இருக்கலாம்.

தற்போது குழந்தை பெற்று கொள்வதற்கு விதிக்கப்பட்டிக்கும் தடை நீக்கப்பட்டிருந்தாலும் பல்வேறு பகுதிகளில் இன்னும் மூன்று குழந்தைகள் பெறுவதற்காக தண்டிக்கப்படுகிறார்கள் என்றார்.

கடந்த 1970 ல் ஒரு பெண்ணிற்கு சராசரியாக பிறப்பு விகிதம் 5.9 என்ற அளவில் இருந்தது.அதே நேரத்தில் 1990 களில் 1.6 ஆக குறைந்தது.

தற்போதைய நிலையில் குறைந்து வரும் பிறப்பு விகித்தை கணக்கில் கொண்டால் வரும் 2050 களில் தொழிலாளர்களின் எண்ணிக்கை 23 சதவீதம் அளவிற்கு குறையும் எனவும் மக்கள் தொகை பிரச்னை மெதுவான நீண்ட கால பிரச்னை என கூறி உள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of