பேராசிரியர் க.அன்பழகனின் உடல் தகனம் செய்யப்பட்டது

508

திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவரும். முன்னாள் நிதியமைச்சரும் திமுக பொதுச் செயலாளருமான பேராசிரியர் க.அன்பழகனின் உடல், சென்னை வேலங்காடு மின்மயானத்தில் தனகம் செய்யப்பட்டது.

திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன், வயது முதிர்வு காரணமாக கடந்த ஒரு வருடமாக வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை மோசம் அடைந்ததை தொடர்ந்து சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு சிறப்பு மருத்துவர்கள் மூலம்  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், அவரது உடல் நிலையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில் இன்று அதிகாலை ஒரு மணி அளவில் சிகிச்சை  பலனின்றி அவர் காலமானார்.

இதைத்தொடர்ந்ந்து, கீழ்ப்பாக்கம் இல்லத்தில் பேராசிரியர் க.அன்பழகனின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அன்பழகன் உடல் வேலங்காடு மின்மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

இறுதி ஊர்வலத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன், திமுக எம்.பி.க்கள், எம்எல்ஏ.க்கள், மாநில நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.