பா.ஜனதா பிரச்சாரத்தில் பாட்டில் வீசிய 2 பேர் கைது

479

பெரியபட்டிணத்தில் பா.ஜனதா வேட்பாளர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திறந்த வெளி ஜீப்பில் நின்று வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.அப்போது மர்ம நபர்கள் வீட்டின் மாடி மீது இருந்து பாட்டிலை வீசினர். இதில் வேட்பாளர் நயினார்நாகேந்திரன், அமைச்சர் டாக்டர் மணிகண்டன் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.

அவர்களுக்கு அருகில் இருந்த திருப்புல்லாணி ஒன்றியம் அ.தி.மு.க. அவைத் தலைவர் உடையத்தேவர் என்பவர் மீது பாட்டில் விழுந்து மண்டை உடைந்தது. அமைச்சர் டாக்டர் மணிகண்டன் தலையிட்டு கட்சியினரை அமைதிப்படுத்தினார். அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

இதுகுறித்து திருப்புல்லாணி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாட்டில் வீசிய மர்ம நபரை தேடிவந்தனர்.

இந்த நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் பெரியபட்டிணம் நடுத்தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ரிபாஸ் கான் (வயது22) மற்றும் முஹமது பாதுஷா (வயது33) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Advertisement