சிறுவனை கருணை கொலை செய்ய முடியாது – உயர்நீதிமன்றம்

681

மூளை பாதிப்புக்குள்ளான சிறுவனை கருணை கொலை செய்ய கோரிய வழக்கில், இது போன்ற சிறுவர்களுக்கு உதவி வழங்கும் வகையில் ஏன் திட்டம் வகுக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தொடர் வலிப்பு நோயால் மூளை பாதிப்புக்குள்ளான சிறுவனை கருணை கொலை செய்யக்கோரிய மனு நீதிபதி கிருபாகரன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது மூளை பாதிப்புக்குள்ளான, 10 வயது சிறுவனை கருணை கொலை செய்ய இயலாது என மருத்துவ அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இது போன்ற பிரச்சனைகளை நிரந்தரமாக குணப்படுத்தவும் முடியாது என மருத்துவ நிபுணர்கள் அறிக்கை தாக்கல் செய்தனர். இதனை படித்த நீதிபதி கிருபாகரன் கண் கலங்கினார்.

பின்னர் சிறுவனின் பெற்றோருக்கு மாதாந்திர நிதியுதவி, மருத்துவ உதவி வழங்குவது குறித்து பதிலளிக்க உத்தரவிட்டார்.

மேலும் இதுபோன்ற சிறுவர்களுக்கு உதவி வழங்கும் வகையில் ஏன் திட்டம் வகுக்கக்கூடாது என கேள்வி எழுப்பிய நீதிபதி, மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.