முதல்வர் நிவாரண நிதிக்கு உதவிய சிறுவன்

289

காஞ்சிபுரத்தில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் சிறுவன், தான் சேர்த்து வைத்த உண்டியல் பணத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கியிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவரின் 6 வயது மகன் ரோஹித் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். பெருந்தொற்று பற்றிய செய்திகளை கேட்ட சிறுவன், தான் உண்டியலில் சிறுக, சிறுக சேமித்து வைத்திருந்த ஆயிரம் ரூபாய் பணத்தை வழங்க முடிவெடுத்த சிறுவன், பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இந்நிலையில் சிறுவனின் தந்தை, மகன் ரோஹித் பெயரில் இணையதளத்தில் நேரடியாக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஆயிரம் ரூபாய் செலுத்தினார். உலகத்தையே பெருந்தொற்று அச்சுறுத்தி வரும் நிலையில் முதலமைச்சரின் வேண்டுகோளை ஏற்று, சேமிப்பு பணத்தை நிவாரண உதவிக்கு கொடுத்த சிறுவனின் செயல் அனைவரும் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Advertisement