4 வயது சிறுவனை நீரில் மூழ்கடித்து கொலை செய்தவன் கைது

554

குமரி மாவட்டம் ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்த மீனவ தம்பதி ஆரோக்கிய கெபின்ராஜ்(36)  சகாய சிந்துஜா(32). இவர்களின் 4 வயது மகன் ரெய்னா. நேற்று முன் தினம் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த சிறுவன் திடீரென மாயமானான்.அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகனை பல இடங்களில் தேடினர். சிறுவனை அந்தோணிசாமி பைக்கில் அழைத்து சென்றதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக கன்னியாகுமரி போலீசில் சிறுவனின் தந்தை புகார் அளித்தார். விசாரணையில் கெபின்ராஜ் அந்தோணிசாமியிடம் 1 லட்சம் ரூபாய் கடனாக பெற்றுள்ளனர். இதில் 42 ஆயிரம் ரூபாய்  செலுத்தி உள்ளனர்.

மீதி 58 ஆயிரம் ரூபாயை திருப்பி தரவில்லை. இதனால் அந்தோணிசாமி உடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால்  ஆத்திரம் அடைந்த அந்தோணிசாமி கெபின்ராஜ் – சகாயசிந்துஜா தம்பதியின் 4 வயது மகன் ரெய்னாவை கடத்தி தென்னந்தோப்பு தண்ணீர் தொட்டிலில் மூழ்கடித்து கொலை செய்துவிட்டு கேரளாவில் தலைமறைவானார்.

மொபைல் போன் உதவியுடன் அந்தோணிசாமியை கைது செய்தனர். கடனுக்காக சிறுவனை கடத்தி நீரில் மூழ்கடித்து படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.