விளையாடிய சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

299

சிதம்பரம் அருகே தெருவில் விளையாடிய சிறுவன் மின்சாரம் தாக்கி  உயிர் இழந்தார்.

சிதம்பரம் ஞானப்பிரகாசம் மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் மணிகண்டன். தந்தை இல்லாததால் தாயின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார். இந்நிலையில் கோயில் அருகே சிறுவன் விளையாடி கொண்டிருந்த போது  மின்கம்பத்தை தொட்டுள்ளார்.

அப்போது மின்சாரம் தாக்கி சிறுவன் வெங்கடேசன் தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இதனையடுத்து மின்வாரியத்தை கண்டித்து சிறுவனின் உறவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

காவல்துறையினர் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டத்தை கைவிட்ட உறவினர்கள் சிறுவனின் சடலத்தை தோளில் சுமந்து சென்றனர். சிறிய குழந்தைகள் கூட தொடும் அளவிலேயே மின் இணைப்பு பெட்டி இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of