அமைச்சர் கடம்பூர் ராஜூவின் அழைப்பு மிகவும் காலதாமதமானது – தங்க தமிழ்ச்செல்வன்

108
thanga-tamil-selvan

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்நாடக அரசால் நிராகரிக்கப்பட்ட மிதிவண்டிகளை அவர்களது முத்திரைகளுடன் தமிழகத்தில் வழங்கி வருவது கண்டனத்திற்குரியது என்றார். அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு தி.மு.க தங்களை அழைக்கவில்லை என்றும், அழைப்பு வந்திருந்தால் கட்டாயம் பங்கேற்றிருப்போம் என்று கூறினார். அ.தி.மு.க அரசு தேர்தலை கண்டு பயப்படுவதாக தெரிவித்த அவர், பெரும்பான்மை இல்லாத இந்த அரசு விரைவில் வீட்டிற்கு அனுப்பப்படும் என்றார். அமைச்சர் கடம்பூர் ராஜூவின் அழைப்பு மிகவும் காலதாமதமானது என்றும், பதவியை பறித்து விட்டு பாசாங்க செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here