சத்தீஷ்கர் மாநிலத்தில் முன் அனுமதியின்றி விசாரணை நடத்த சிபிஐக்கு தடை

334

சத்தீஷ்கர் மாநிலத்தில் முன் அனுமதியின்றி விசாரணை நடத்த சிபிஐக்கு தடை

ஆந்திரா, மேற்கு வங்கத்தை தொடர்ந்து சத்தீஷ்கர் மாநிலத்தில் முன் அனுமதியின்றி விசாரணை நடத்த சிபிஐக்கு அம்மாநில அரசு தடை விதித்து உத்தரவிடுள்ளது.

வழக்கு விசாரணை தொடர்பாக, மாநிலத்தில், மத்திய அரசு அலுவலகங்கள் தவிர, வேறு இடங்களில் சோதனை அல்லது விசாரணை நடத்த வேண்டுமென்றால், சி.பி.ஐ.அதிகாரிகள், மாநில அரசிடம் முன்கூட்டியே தகவல் தெரிவித்து, அரசின் ஒப்புதல் பெற வேண்டும் என்றும், அதற்காக சிபிஐக்கு அளித்திருந்த ஒப்புதலை ரத்து செய்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் அண்மையில் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், சத்தீஷ்கர் மாநில அரசும் அதே நடவடிக்கையை எடுத்துள்ளது. இது குறித்து மத்திய உள் துறை அமைச்சகத்திற்கு அனுப்பிய கடிதத்தில், புதிய விவகாரங்களில் சிபிஐ தனது அதிகார வரம்பை சத்தீஷ்கர் மாநிலத்திற்குள் முன் அனுமதியின்றி பயன்படுத்தக்கூடாது என மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசுக்கு 2001 ஆம் ஆண்டு அளித்திருந்த ஒப்புதலை மாநில உள்துறை திரும்ப பெற்றுள்ளது. சிபிஐ தலைவர் தலைவர் பொறுப்பில் இருந்து அலோக் வர்மாவை நீக்கிய அதே நாளில் சத்தீஷ்கரில் ஆளும் காங்கிரஸ் கட்சி சிபிஐக்கு வழங்கியிருந்த ஒப்புதலை ரத்து செய்துள்ளது குறிப்பிடதக்கது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of