டெல்லி கலவரத்திற்கு மத்திய, மாநில அரசுகள் தான் காரணம் – மு.க.ஸ்டாலின்

246

ராணிப்பேட்டையில் திமுக மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் சிவானந்தம் திருமண மண்டபம் திறப்பு விழா மற்றும் மாவட்ட அவைத் தலைவர் அசோகன் மகள் திருமணம் நிகழ்ச்சியில் முக.ஸ்டாலின் கலந்து கொண்டு சீர்திருத்த திருமணத்தை நடத்தி வைத்தார்.

விழாவில் பேசிய அவர், சி.ஏ.ஏ-வுக்கு அதிமுக மற்றும் அவர்களுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகள் ஆதரவு கொடுத்துள்ளனர் என்றும், ஏனைய கட்சிகள் எதிர்த்து வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.

மேலும், அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்திய வருகையின் போது டெல்லியில் நடைபெற்ற கலவரத்திற்கு, மத்திய, மாநில அரசுகளின் தவறான குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு ஆதரவு அளித்தனின் விளைவு தான் என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், ஊழலில் உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி நம்பர் ஒன் ஆக உள்ளார் என்றும், இவர் முதல்வர் எடப்பாடியையே ஊழலில் தோற்கடித்துவிட்டார் என்றும் விமர்சித்தார்.