ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி! டெல்டா மக்கள் அதிர்ச்சி!

1703

தமிழகத்தில் மக்களவை தேர்தல் முடிந்துள்ள நிலையில், டெல்டா விவசாயிகளுக்கு மத்திய சுற்றுச்சுழல்துறை அதிர்ச்சி கொடுத்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய சுற்றுச்சூழல்துறை அனுமதி அளித்துள்ளதால், விரைவில் இது தொடர்பான ஆய்வு தொடங்க உள்ளது.

நெடுவாசலில் இருந்து அகற்றப்பட்ட இந்த ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம், தற்போது வேறு மூன்று இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. ஹைட்ரோ கார்பன் எடுப்பது தொடர்பான அறிவிப்பு இரண்டு மாதங்களுக்கு வெளியானது.

இந்தியா முழுவதும் மொத்தம் 55 இடங்களில் ஓ.என்.ஜி.சி சார்பில் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்பட உள்ளது. 41 இடங்களில் வேதாந்தா நிறுவனம் எடுக்க உள்ளது. அதன்படி, தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய சுற்றுச்சூழல்துறை அனுமதி அளித்துள்ளது.

ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் விண்ணப்பத்தை ஏற்று கடலூர், நாகையில் 40 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய சூற்றுச்சூழல்துறை அனுமதி அளித்துள்ளது. இதனால் ஓ.என்.ஜி.சி நிறுவனம் 40 இடங்களில் 341 கிணறுகள் அமைக்க உள்ளன. இது தொடர்பான ஆய்வு பணிகள் விரைவில் நடக்க உள்ளது.

இந்த ஆய்வின் படி, டெல்டா மாவட்டங்களில் நிலம் எப்படி இருக்கிறது, அங்கு தன்ணீர் எப்படி உள்ளது, ஹைட்ரோ கார்பன் எடுப்பதால் ஏற்படும் நன்மை, தீமைகள் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும்.