காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மத்திய ஜலசக்தி துறை ஆணையம் எச்சரிக்கை

113

கனமழை காரணமாக கபினியிலிருந்து காவிரியில் அதிக நீர் திறக்க வாய்ப்புள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மத்திய ஜலசக்தி துறை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கர்நாடகாவின் கபினி நீர்பிடிப்பு பகுதிகளில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என்றும், கனமழை காரணமாக கபினி ஆற்றில் இருந்து காவிரிக்கு அதிக நீர் திறக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது.

கபினியில் அதிக நீர் திறக்கப்பட்டால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என்றும், மேட்டூர் அணைக்கு 5 டி.எம்.சி வரை நீர்வரத்து இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of