“சிதம்பர ரகசியம்” முதுமொழி, ரகசியமாக சிதம்பரம் என்பது இன்றைய நிலை

184

“சிதம்பர ரகசியம்”  என்பது முதுமொழி, ஆனால் ரகசியமாக சிதம்பரம் இருக்கிறார் என்பதே இன்றைய நிலை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொது வாழ்க்கையில் தூய்மை இல்லை என்றால் தலைமுறைக்கே தலைவராக இருந்தாலும், தலைமறைவான வாழ்க்கைதான் வாழ வேண்டியிருக்கும் என தெரிவித்துள்ளார். இதனை உலகுக்கு உணர்த்தி இருக்கிறது, சிதம்பரத்தின் ஊழல் போக்கு என்று குறிப்பிட்டுள்ளார்.

ஓடி ஒளிந்து கொண்டு, தவறை மறைத்துவிட்டு, அரசியல் காரணங்களை கூறுவது எப்படி சரியாகும்? என்றும் தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார். காங்கிரஸ் என்றாலே ஊழல் என்றும், சூழலுக்கும், ஊழலுக்கும் ஏற்றார்போல் பிரியங்காந்தி ட்வீட் செய்வது, அதைவிட தலைகுனிவு எனவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.