“குடியுரிமை திருத்தச்சட்டம் திரும்பப் பெறப்படமாட்டாது”

223

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, குடியுரிமை திருத்த சட்டம் இந்தியர்களின் குடியுரிமையை பறிக்கும் சட்டம் இல்லை என விளக்கம் அளித்தார்.

இந்த சட்டத்தின் மூலம் இந்தியர்களின் குடியுரிமை பறிக்கப்படும் என எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியுமா என்றும், குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக பொது வெளியில் விவாதிக்க தயாரா என எனவும் அமித்ஷா எதிர்க்கட்சிகளுக்கு சவால் விடுத்தார்.

தொடர்ந்து பேசிய அவர் தற்போது, அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆகவே வானலாவிய ராமர் கோவில் கட்டும்பணிகள் அடுத்த மூன்று மாதங்களுக்குள் தொடங்கப்படும் என்று குறிப்பிட்டார். போராட்டங்கள் நடைபெற்றாலும் ஒருபோதும் குடியுரிமை திருத்தச்சட்டம் திரும்பப் பெறப்படமாட்டாது என்பதை நான் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.