உயர் நீதிமன்ற கேள்விக்கு முதல்வர் பதில் அளிக்காதது கண்டனத்திற்குரியது | Stalin

109

தமிழக அரசு நீட் தேர்வை ஏன் திரும்பப்பெற கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியும், முதலமைச்சர் எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருப்பது கண்டனத்திற்குரியது என்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் பதவியை காப்பாறிக்கொள்ள வேண்டும் என்ற ஒரே நோக்குடன், தமிழக மாணவர்கள் மீது நீட் தேர்வை திணித்து, பல தற்கொலைகளுக்கு அதிமுக அரசு வித்திட்டுள்ளதாக சாடியுள்ளார்.

அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள 3 ஆயிரத்து 200 மருத்துவ இடங்களில், 48 பேர் மட்டுமே நீட் பயிற்சி மையத்தில் பயிலாமல் மருத்துவ கல்வியில் சேர்ந்துள்ளனர் என்று, அதிமுக அரசே உயர் நீதிமன்ற வழக்கு விசாரணையில் தெரிவித்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

நீர் தேர்வை தமிழக அரசு ஏன் திரும்பப்பெற கூடாது என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு கேள்வி எழுப்பியும், முதலமைச்சர் எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருப்பது கண்டனத்திற்குரியது என்று அறிக்கையில் ஸ்டாலின் கூறியுள்ளார்.