மீண்டும் உச்சகட்டத்தை எட்டிய கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி இடையேயான கருத்து மோதல்

580

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி இடையேயான கருத்து மோதல் மீண்டும் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்த போது, தனியார் பள்ளியிலிருந்து பெறப்பட்ட 7 லட்சம் ரூபாய் சி.எஸ்.ஆர். நிதி என்ன ஆனது? என கேள்வி எழுப்பினார்.

துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, சி.எஸ்.ஆர். திட்டத்தின் மூலம் பணம் வசூல் செய்து அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளார் எனவும் குற்றம்சாட்டினார்.

இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஆளுநர் கிரண்பேடி, ஆளுநர் மாளிகை பொதுமக்களுக்கு சேவை செய்யும் ஒரு மையமாக உள்ளது என்றும் இதுவரை யாரிடமும் பணமோ, பொருட்களோ பெறப்படவில்லை என விளக்கம் அளிதுள்ளார்.

ஆளுநர் மாளிகைக்கு வரும் பரிசுப் பொருட்கள் ஏழை மக்களுக்கே வழங்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் நாராயணசாமி தொடர்ந்து ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை தெரிவிப்பதாக கூறியுள்ளளார்.

மேலும் பொய் சொல்வது பாவம் என்பதை முதலமைச்சர் நாராயணசாமி உணர வேண்டும் எனவும் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.