நீதிமன்றத்தில் தவறான தகவல் அளித்த காங்கிரஸ் கட்சி மீது நடவடிக்கை

542

நீதிமன்றத்தில் தவறான தகவல் அளித்த காங்கிரஸ் கட்சி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் வலியுறுத்தி உள்ளது.

மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களுக்கு, விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இரு மாநிலங்களிலும், ஆளுங்கட்சியை சேர்ந்த பா.ஜ.க.வினர், போலி வாக்காளர்களை சேர்த்துள்ளதாக, காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது.

இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்த காங்கிரஸ் கட்சி, உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்துள்ள தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியல் வெளிப்படைத் தன்மையுடன் இருப்பதாகவும், தேர்தல் ஆணைய இணைய தளத்திலும் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை என்று தெரிவித்துள்ளது. எனவே நீதிமன்றத்தில் தவறான தகவல் அளித்த காங்கிரஸ் கட்சி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.