மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக விமர்சித்த வழக்கு: 2 வாரத்தில் ஆஜாராக திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நீதிமன்றம் உத்தரவு

465

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை விமர்சித்து பேசியதாக தொடரப்பட்ட 3 வழக்குகளை ரத்து செய்யக்கோரி திமுக தலைவர் ஸ்டாலின் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக எம்.பி., எம்எல்ஏ-க்கள் வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஸ்டாலின் 2 வாரத்தில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். மேலும், நீதிமன்றத்தை மதிப்பதாக கூறும் ஸ்டாலின் ஒருமுறை கூட நீதிமன்றத்தில் ஆஜராகாதது ஏன் எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

Advertisement