2 மாதங்களுக்கு ‘அதை’ பயன்படுத்தக்கூடாது..! நீதிமன்றத்தின் வித்தியாசமான நிபந்தனை..!

594

மத்திய பிரதேசத்தின் பிந்த் மாவட்டம் அஸ்வர் கிராமத்தை சேர்ந்தவர் ஹரேந்திர தியாகி. 18 வயதான இவர் உள்ளூர் கடைக்காரரைத் தாக்கியதாக  கடந்த ஜூன் 23 ஆம் தேதி கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.

சமீபத்தில் பள்ளிப்படிப்பை முடித்த ஹரேந்திர தியாகி, தனது வழக்கறிஞர் மூலம் ஜாமின் கோரி மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

குற்றம்சாட்டப்பட்டவரின் எதிர்கால நலனைக்கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமின் வழங்க வேண்டும் என அவரது வழக்கறிஞர் மனுவில் குறிப்பிட்டுருந்தார்.

இதனைப் பரிசீலித்த நீதிமன்றம் மனுதாரர் 2 மாதங்களுக்கு வாட்ஸ் அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தக் கூடாது என்றும், தனது சுற்றுவட்டாரப் பகுதிகளில் 5 மரங்களை நட்டு பராமரிக்க வேண்டும் என நிபந்தனைகளை விதித்து ஜாமின் வழங்கியது.

Advertisement