இந்திய அணி மோதும் லீக் போட்டிகள் தேதிகள் அறிவிப்பு.

335

ஒரே ஆண்டில், ஒரே நாட்டில் ஆடவர், மகளிர் டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை நடப்பது கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாகும்.ஆடவர் பிரிவு டி20 உலகக்கோப்பை போட்டிகள் 2020-ம் ஆண்டு அக்டோபர் 24-ம் தேதி முதல் நவம்பர் 15-ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக அக்டோபர் 18-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை தகுதிச்சுற்றுப் போட்டிகள் நடைபெறுகின்றன. அக்டோபர் 24-ம் தேதி முதல் நவம்பர் 8-ம் தேதி வரை லீக் சுற்றுப்போட்டிகள் நடக்கின்றன.

நவம்பர் 11 மற்றும் 12-ம் தேதிகளில் அரையிறுதிப் போட்டிகளும், 15-ம் தேதி இறுதிப்போட்டியும் நடைபெறுகிறது. ஒட்டுமொத்தமாக அக்டோபர் 18-ம் தேதி முதல் நவம்பர் 15-ம் தேதி வரை 45 போட்டிகள் நடக்கின்றன, 16 அணிகள் பங்கேற்கின்றன. 7 நகரங்களில், 7 இடங்களில் போட்டி நடத்தப்படுகிறது.

தகுதிச்சுற்றுப் போட்டிகள் முடிந்த நிலையில் குரூப் ஸ்டேஜ் ஆட்டங்கள் 2020 அக்டோபர் 24-ம் தேதி தொடங்குகின்றன. முதல் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் ஆஸ்திரேலிய அணியுடன் பாகிஸ்தான் அணி மோதுகிறது. நடப்பு சாம்பியன் மேற்கிந்தியத் தீவுகள் அணி அக்டோபர் 25-ம் தேதி தனது முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது

குருப்-1

பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, மே.இ.தீவுகள், நியூசிலாந்து, தகுதிச்சுற்றில் ஏ பிரிவில் முதல் அணி, பி பிரிவில் 2-ம் அணி

குரூப்-2

இந்தியா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, தகுதிச்சுற்றில் பி பிரிவில் முதல் அணி, ஏ பிரிவில் 2-ம் அணி

இந்திய அணி மோதும் லீக் போட்டிகள் தேதிகள்

  1. 2020-ம் ஆண்டு அக்டோபர் 24-ம் தேதி பெர்தில் தென் ஆப்பிரிக்காவுடன் இந்திய அணி மோதுகிறது.
  2. 29-ம் தேதி தகுதிச்சுற்றில் ஏ பிரில் 2-ம் அணியுடன் இந்திய அணி மோதுகிறது. இது மெல்போர்னில் நடக்கிறது.
  3. நவம்பர் 1-ம்தேதி மெல்போர்னில் நடக்கும் ஆட்டத்தில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது இந்திய அணி.
  4. நவம்பர் 5-ம் தேதி அடிலெய்டில் நடக்கும் ஆட்டத்தில் பி பிரிவில் முதல் அணியுடன் இந்திய அணி மோதுகிறது.
  5. நவம்பர் 8-ம் தேதி சிட்னியில் நடக்கும் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி.

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of