காதலர் தினத்தில் காதலனுடன் சேர்ந்து தாயை கொன்ற மகள்

101

உத்திர பிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்த பெண் ஒருவர் வீட்டில் இறந்து கிடந்தார். இவர் டெல்லி தலைமை கான்ஸ்டபிளாக உள்ளார். இவரின் மகள் 10 பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர் 6ம் வகுப்பு படித்து பாதியில் நிறுத்திய 19 வயது இளைஞரான ஜிதேந்திர குமாரை காதலித்து வந்துள்ளார். பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தை கொண்டாட ஜிதேந்தர் சிறுமியின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்த காதல் சிறுமியின் தாய்க்கு தெரியவந்தது. சிறுமியை அறைந்த தாய் ஜிதேந்தர் வீட்டிற்கு சென்று கண்டித்துள்ளார். அவர்களின் பெற்றோர் சிறுமியின் வீட்டிற்கு வருவதற்குள் ஜிதேந்தர் அங்கிருந்து சென்றுள்ளார்.

அதன் பின்னர் காதலனுக்கு போன் செய்த சிறுமி தன் தாயை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளாள். மீண்டும் சிறுமியின் வீட்டிற்கு வந்த ஜிதேந்தர் தனது காதலியான அந்த சிறுமியுடன் சேர்ந்து சிறுமியின் தாயின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி பின்னர் கிரைண்டர் கல்லை எடுத்து அவரை தாக்கியுள்ளனர்.

அதன் பின் கயிற்றால் கழுத்தை நெரித்து கொன்றனர். தாயை கொன்று விட்டு வெளியே தெரியாமல் இருக்க பக்கத்து வீட்டரை அழைத்து தாய் மயக்கமடைந்ததாக கூறினாள்.

மருத்துவமனைக்கு தாயை அழைத்து சென்ற போது அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என தெரியவந்தது. தகவல் அறிந்து பீகாரில் வேலை பார்த்து வந்த சிறுமியின் தந்தை மனைவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கண்டறிந்து போலீசில் புகாரளித்தார் அதன் அடிப்படையில் நடந்த விசாரணையில் அனைத்து உண்மைகளும் வெளியே வந்தது.

இதனால் காதலர்கள் இருவரையும் கைது செய்து இருவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. என போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of